சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபி
சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபி வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். இதனை வாழை மொட்டு என்றும் அழைப்பதுண்டு. இவ்வாழைப்பூ உணவு சமைக்க காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது.குழம்பு, அடை, சூப் போன்று பல்வேறு வகையான உணவுகள் வாழைப்பூவைக் கொண்டு செய்யப்படுகின்றன. வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். * பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும். * வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும். * உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும். * மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். * வாழைப்பூவில் உப்பு போட்டு வேக வைத்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும். * ஆண்களுக்கு விந்துவை விருத்தி செய்யும். * மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. * வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்.